search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வீரர்கள்"

    • கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார்.
    • சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இந்நிலையில், அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய அவர், இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது என தெரிவித்தார்.

    • தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    • இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

    ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் 2025 தொடருக்கான ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடன்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

    தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ரிடன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏலத்தை அர்த்தமற்றதாகிவிடும் என்று சில ஐபிஎல் மூத்த அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றனர்.

     

    ஏலங்கள் ஐபிஎல் தொடர்களின் முக்கியமான அங்கம் என்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக ஏலங்களும் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் தொடருக்கு அழகு சேர்க்கும் ஏலங்கள், ரிடன்க்ஷன் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை அதிகரிக்கப்பட்டால் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

     

     

    விராட் கோலி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களே ஒரே அணியின் அடையாளமாக மாறியுள்ளனர். அவர்கள் இதுநாள் வரை ஒரே அணிக்கு விளையாடி வருகின்றனர். மற்றைய வீரர்களும் ஒரே அணியின் அடையாளமாக மாறினால் ஏலம் எடுக்கும் முறை தேவைப்படாது. ஆனால் பெரும்பான்மை வீரர்கள் ஒரே அணியுடன் தங்களை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக்கொள்ள இன்னும் வெகு காலம் ஆகும். அதுவரை ஏல முறை தொடரவே செய்யும். இதுவே ரிட்டன்க்ஷன் முறைக்கு தீர்வாக இருக்குமே தவிர ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது பயனற்றது என்று கூறப்படுகிறது.

    இதற்கு மாற்றுக்கருத்தாக, "ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்த வீரர்கள் மீது அதிக அளவில் முதலீடு செய்கிறது, அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவளித்து பயிற்சி தந்து தயார் படுத்துகிறது. இதனால் அந்த வீரர் அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவதே நியாயமானதாக இருக்கும். இதற்கு ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் பயனளிக்கும்" என்றும் சில மூத்த ஐபிஎல் அதிகாரிகளால் கூறப்படுகிறது.

     

    அடுத்த ஐபிஎல் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அணி உரிமையாளர்களுடன் சமீபத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. புதியதாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார்.
    • இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும்.

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி- போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்து நடித்து வருகிறார்.

    இவரது படங்கள் பல வெளியாகி உள்ளன. ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் அவரது நடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

    தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகுகிறது. 

    இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து உள்ள பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் தனக்கு பிடித்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஷமி, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். #ArjunaAward #BCCI
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. #ArjunaAward #BCCI
    மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    மும்பை:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.



    இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.

    ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர்.


     
    பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வருகை தந்தனர்.



    இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே உள்பட பலரும் வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்தனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனம் உட்பட செய்திகள் அனுப்பும் புதியரக கைக்கடிகாரத்தை போட்டியின் போது அணியக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. #ICCanticorruption
    லண்டன்:

    கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது ஐசிசி-யின் விதிமுறைகள் படி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் செல்போன்கள் மற்றும் செய்தி தொடர்பு சாதனங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. போட்டி முடிவடைந்த பின்னரே உபயோகிக்க முடியும். போட்டியின் போது சூதாட்டத்தை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் வாட்ச் மூலம் செய்திகளை பரிமாற முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அப்போது கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிந்திருந்தனர். இதனால் ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் வீரர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். இதன் பின் அணிய மாட்டோம் என வீரர்கள் உறுதி அளித்தனர். #ICCanticorruption

    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது டெல்லி போலீசார் தொடுத்திருந்த சூதாட்ட வழக்கில் ஜூலைக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.


    இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    ×